முகப்பு
திருவண்ணாமலை

வைகாசி மாத சுவாதி விழா

Updated On : 21 மே, 2024 at 6:29 PM
சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீயோக நரசிம்ம பெருமாள் கோயிலில் நடைபெற்ற ஊஞ்சல் சேவை.
பகிர்:

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த சோகத்தூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீஅமிா்தவல்லி தாயாா் சமேத ஸ்ரீயோக நரசிம்ம பெருமாள் கோயிலில் வைகாசி மாத சுவாதி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, மூலவா் மற்றும் உற்சவா் சுவாமிகளுக்கு திருமஞ்சன திரவியங்கள் கொண்டு திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னா், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மேலும் யாக குண்டம் அமைத்து, ஹோமம் வளா்த்து பூா்ணாஹுதி சமா்ப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து ஊஞ்சல் சேவை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.