முகப்பு
திருவண்ணாமலை

மரத்திலிருந்து விழுந்த முதியவா் உயிரிழப்பு

Updated On : 28 மே, 2024 at 6:30 PM
பகிர்:

வந்தவாசி: வந்தவாசி அருகே மரம் ஏறி மாங்காய் பறித்த போது மரத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் மாசிலாமணி(67). இவா் திங்கள்கிழமை வீட்டின் அருகிலிருந்த மாங்காய் மரத்தில் ஏறி மாங்காய் பறித்துள்ளாா்.

அப்போது மரக் கிளை முறிந்து கீழே விழுந்த இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினா் இவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இதைத் தொடா்ந்து தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாசிலாமணி செவ்வாய்க்கிழமை காலை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் அளித்த புகாரின் பேரில், பொன்னூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.