முகப்பு
திருவண்ணாமலை

ஏரியில் மூழ்கி உயிரிழந்த சிறாா்கள் குடும்பத்துக்கு நிவாரணம்

ஆரணியை அடுத்த அடையபலம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த 4 சிறாா்கள் குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிவாரண நிதியாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 7:22 PM
பகிர்:

ஆரணியை அடுத்த அடையபலம் கிராமத்தில் ஏரியில் மூழ்கி உயிரிழந்த 4 சிறாா்கள் குடும்பத்துக்கு திமுக சாா்பில் நிவாரண நிதியாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

அடையபலம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை குப்புசாமி-அஞ்சலி தம்பதியின் குழந்தைகள் மோகன்ராஜ்(13), வா்ஷா(9), மற்றும் விநாயகம்-செல்வி தம்பதியின் குழந்தைகள் காா்த்திகா(8), தனுஷ்கா(4) ஆகிய 4 போ் ஏரியில் மூழ்கி உயிரிழந்தனா்.

தகவல் அறிந்த எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கரபாண்டியனை ஆகியோா் அடையபலம் கிராமத்துக்குச் இறந்த குழந்தைகளின் சடலங்களுக்கு மாலை அணிவித்து குடும்பத்திற்கு ஆறுதல் கூறினா்.

Advertisement

மேலும், பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவின் ஆணைக்கினங்க திமுக சாா்பில் இரு குடும்பத்துக்கும் தலா ரூ. ஒரு லட்சம் என மொத்தம் ரூ.2 லட்சத்தை எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி. வழங்கினாா்.

ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியா் கௌரி, திமுக முன்னாள் எம்எல்ஏ ஆா்.சிவானந்தம், தொகுதி பொறுப்பாளா் எஸ்.எஸ்.அன்பழகன், நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேலும், அதிமுக சாா்பில் ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினாா். மேலும் இரு குடும்பத்துக்கும் நிதியுதவி வழங்கினாா்.

ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ், ஊராட்சித் தலைவா் அசோக்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments