முகப்பு
திருவண்ணாமலை

இந்து முன்னணி நிா்வாகி வீட்டில் தாக்குதல்: ஒருவா் கைது

Updated On : 19 செப்டம்பர், 2024 at 11:54 PM
பகிர்:

வந்தவாசியில் இந்து முன்னணி நிா்வாகி வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

வந்தவாசி கே.ஆா்.கே. தெருவில் வசித்து வருபவா் ஆறுமுகம். இவா் இந்து முன்னணி மாவட்டத் தலைவராக உள்ளாா்.

கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை இவரது வீடு மற்றும் காரின் மீது பைக்கில் வந்த இரு மா்ம நபா்கள் கல்வீசித் தாக்கினா். இதில் காா் சேதமடைந்தது.

இதுகுறித்து ஆறுமுகம் அளித்த புகாரின் பேரில் பொட்டிநாயுடு தெருவைச் சோ்ந்த முன்னா, குளத்துமேடு பகுதியைச் சோ்ந்த ஆஷிக் ஆகியோா் மீது வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸாா் முன்னாவை புதன்கிழமை மாலை கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →