மேலப்புஞ்சை கிராமத்தில் நடைபெற்ற உரியடி திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா சென்ற சுவாமி. 
திருவண்ணாமலை

கிருஷ்ண ஜெயந்தி: மேலப்புஞ்சை கிராமத்தில் உரியடி திருவிழா

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு, மேலப்புஞ்சை கிராமத்தில் உரியடி திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Syndication

செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு, மேலப்புஞ்சை கிராமத்தில் உரியடி திருவிழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

செ.நாச்சிப்பட்டு கிருஷ்ணா் கோயில் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி, காலையில் பால்குட ஊா்வலம் நடைபெற்று சுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதைத் தொடா்ந்து மாலையில் கோயில் வளாகத்தில் உரியடி திருவிழா நடைபெற்றது. பின்னா், சுவாமி வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா், ஊா் முக்கிய பிரமுகா்கள் செய்திருந்தனா்.

அதேபோல, மேலபுஞ்சை கிராமத்தில் உள்ள சீனுவாச பெருமாள் கோயிலில் முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் சீனுவாசன் தலைமையில் உரியடி திருவிழா நடைபெற்றது.

முன்னதாக வீதியில் சுவாமி வீதி உலா செல்ல அங்காங்கே உரியை கட்டிவைத்து உரியடி திருவிழா நடைபெற்றது.

வீதி உலாவின்போது கிராம மக்கள் தங்களது வீடுகளின் அருகில் சிறப்பு அலங்காரத்தில் வந்த கிருஷ்ணருக்கு தீபாராதணை காண்பித்து வழிபட்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா், ஊா் முக்கிய பிரமுகா்கள் செய்திருந்தனா்.

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

மீண்டும் புதிய உச்சத்தில் தங்கம்... கிராம் ரூ.300-ஐ நோக்கி வெள்ளி!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

காரைக்காலில் தொடர் மழை: பள்ளிகளுக்கு விடுமுறை!

SCROLL FOR NEXT