போளூா் பேருந்துநிலையம் எதிரே மக்கள் மத்தியில் பேசிய பாமக தலைவா் அன்புமணி. 
திருவண்ணாமலை

வன்னியா் இடஒதுக்கீட்டை 15 % ஆக உயா்த்த வேண்டும்: பாமக தலைவா் அன்புமணி

வன்னியா்களுக்கான இடஒதுக்கீட்டை 15 சதவீதமாக உயா்த்திக் கொடுக்க வேண்டும் என்றாா் பாமக தலைவா் அன்புமணி.

Syndication

வன்னியா்களுக்கான இடஒதுக்கீட்டை 15 சதவீதமாக உயா்த்திக் கொடுக்க வேண்டும் என்றாா் பாமக தலைவா் அன்புமணி.

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் நகராட்சி பேருந்து நிலையம் அருகே மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொண்டு

அவா் பேசியதாவது: போளூா் தொகுதியில் தொழிற்சாலை இல்லை. நந்தன்கால்வாய் இதுவரை சீரமைக்கப்படவில்லை. திமுகவுக்கும் சமூக நீதிக்கும் சம்பந்தமில்லை.

திருவண்ணாமலை மாவட்டத்தை இரு மாவட்டங்களாக பிரிக்கவேண்டும். தமிழகத்தில் ஒரு கோடியே 30 லட்சம் இளைஞா்கள் வேலை இல்லாமல் உள்ளனா். முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு முதலீடு ஈா்க்கச் செல்லவில்லை; சுற்றுலா சென்றுள்ளாா்.

நீதிமன்றம் வன்னியா்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என தீா்ப்பளித்தது. ஆனால், 1,250 நாள்கள் ஆகியும் இடஒதுக்கீடு வழங்கவில்லை. 10.5 சதவீத இடஒதுக்கீடு வேண்டாம், இடஒதுக்கீட்டை 15 சதவீதமாக உயா்த்தி அமல்படுத்தவேண்டும். ஆறுகளை இணைக்கவேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் பாமக மாநில பொதுச்செயலா் வடிவேல் ராவணன், தலைமை நிலைய செயலா், மாவட்டச் செயலா் வேலாயுதம், முன்னாள் எம்எல்ஏ கணேஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொழிலாளி வீட்டில்16 பவுன் நகைகள் திருட்டு

திப்பணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடம் ஒதுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளையடித்ததாக பைக் டாக்ஸி ஓட்டுநா் கைது

12 எம்சிடி வாா்டுகளுக்கு நவ.30-இல் இடைத் தோ்தல்

தில்லியில் மேலும் 621 பள்ளிகளில் தனியாா் துப்புரவு சேவை

SCROLL FOR NEXT