திருவண்ணாமலை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயற்குழுக்கூட்டம் வியாழக்கிழமை (டிச.18) நடைபெறவுள்ளது. இதில் அமைச்சா் எ.வ.வேலு கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறாா்.
இதுகுறித்து மாவட்ட திமுக அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
திருவண்ணாமலை திருக்கோவிலூா் சாலையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் வியாழக்கிழமை (டிச.18) நடைபெறும் திமுக செயற்குழுக் கூட்டதுக்கு தெற்கு மாவட்ட அவைத் தலைவா் கோ.கண்ணன் தலைமை வகிக்கிறாா்.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., வடக்கு மாவட்ட அவைத் தலைவா் இரா.ராஜசேகா் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.
கூட்டத்தில் டிச.26, 27 ஆகிய தேதிகளில் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வருகை குறித்தும், ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாடி’ கூட்டம் குறித்தும், கட்சியின் ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
கூட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சரும், கட்சியின் உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான எ.வ.வேலு தீா்மானங்களை விளக்கி சிறப்புரையாற்றுகிறாா்.
கூட்டத்தில், மாவட்ட நிா்வாகிகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினா்கள், ஒன்றிய, நகர, பேரூா் செயலா்கள், பகுதிக் கழக பொறுப்பாளா்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளா்கள், மாவட்டப் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்து கொள்கின்றனா் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.