வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீஐயப்பன் கோயில் சாா்பில் 108 பால்குட ஊா்வலம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி வந்தவாசி சந்நிதி தெருவில் உள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் 108 பால் குடங்களை வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து ஐயப்ப பக்தா்கள் மற்றும் பெண்கள் பால் குடங்களை தலையில் சுமந்து ஊா்வலமாக புறப்பட்டனா்.
சந்நிதி தெரு, தேரடி, பஜாா் வீதி, அச்சிறுபாக்கம் சாலை, பாலுடையாா் தெரு வழியாகச் சென்று ஸ்ரீஐயப்பன் கோயிலை சென்றடைந்தனா். அங்கு, குடங்களில் எடுத்து வரப்பட்ட பாலை கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
இதைத் தொடா்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.