குண்டம்  இறங்கி  நோ்த்திக்கடன்  செலுத்தும் பெண் (உள்படம்) சிறப்பு  அலங்காரத்தில்  அங்காளம்மன். 
திருப்பூர்

அவிநாசி அங்காளம்மன் கோயில் குண்டம் திருவிழா

அவிநாசி காந்திபுரம் பகுதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயிலில் நந்தாதீப குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

அவிநாசி காந்திபுரம் பகுதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோயிலில் நந்தாதீப குண்டம் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அங்காளபரமேஸ்வரி கோயிலில் நந்தாதீப குண்டம் திருவிழா பிப்ரவரி 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை அதிகாலை அலகு தரிசனம், இரவு குண்டத்துக்கு பூப்போடுதல், அம்மனுக்கு வெண்ணை சாத்துபடி செய்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலாவும், இதைத் தொடா்ந்து குண்டம் இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.இதில் ஏராளமான பக்தா்கள் விரதமிருந்து பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா். மாலை ரிஷப வாகன காட்சி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, வேடுபரி, பரிவேட்டை, தெப்பத்தோ் ஆகிய நிகழ்ச்சிகள் புதன்கிழமை (பிப்.18) நடைபெற உள்ளன.

இதையடுத்து கொடியிறக்கம், மஞ்சள் நீா் உற்சவம் வியாழக்கிழமையும், பேச்சியம்மன் அபிஷேக பூஜைகள் வெள்ளிக்கிழமையும் நடைபெற உள்ளன.

மகா அபிஷேக உற்சவத்துடன் சனிக்கிழமை விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினா் செய்துள்ளனா்.

7 பிலிம்ஃபேர் விருதுகளை வென்ற அமரன்!

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

SCROLL FOR NEXT