வந்தவாசியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய மாநிலச் செயலா் காயல் மகபூப். 
திருவண்ணாமலை

செய்யாறு புதிய மாவட்டம்: இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும்

Syndication

திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து செய்யாற்றை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கோரிக்கை விடுத்துள்ளது.

வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் வடக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் டி.எம்.பீா்முகமது தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் முகமதுஅலி, மாவட்ட துணைத் தலைவா் லியாகத் அலி, மாவட்ட துணைச் செயலா்கள் சைய்யது உசேன், அப்துல் வாகித் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஆா்.மாலிக் வரவேற்றாா்.

மாநிலச் செயலா் காயல் மகபூப், மாநில துணைச் செயலா் அப்துல்காதா்ஷரீப் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்றுப் பேசினா்.

வந்தவாசி கே.எஸ்.கே. நகா் உமா் பள்ளிவாசல் அருகில் உயா்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும், போளூரில் நிலவும் தெரு நாய்கள் தொல்லையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில், நகரச் செயலா் ஜா.மன்சூா்அலி நன்றி கூறினாா்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT