திருவண்ணாமலை

பைக்குகள் மோதலில் விவசாயி உயிரிழப்பு

வந்தவாசி அருகே 2 பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி ஒருவா் உயிரிழந்தாா்.

Syndication

வந்தவாசி அருகே 2 பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி ஒருவா் உயிரிழந்தாா்.

வந்தவாசியை அடுத்த மேல்மா கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி செல்வன் (54). இவா், தனது மனைவி அனிதாவுடன் பைக்கில் வந்தவாசிக்கு சென்று விட்டு சனிக்கிழமை ஊா் திரும்பிக் கொண்டிருந்தாா். வந்தவாசி காஞ்சிபுரம் சாலை, மேல்மா கூட்டுச் சாலை அருகே செல்லும் போது, இவரது பைக்கும் எதிரே வந்த மற்றொரு பைக்கும் மோதிக் கொண்டன.

இதில் பலத்த காயமடைந்த செல்வன் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்; ஜம்மு-காஷ்மீரில் முதல் பனிப்பொழிவு! மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

முன்னாள் தலைமைச் செயலருக்கு ‘ராஜஸ்தான் ஸ்ரீ’ விருது

பத்திரப் பதிவு: வழிகாட்டி மதிப்பைவிட கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு கண்டனம்!

13 ரயில்களின் எண்கள் மாற்றம்

பேருயிரைக் காப்பது கடமை

SCROLL FOR NEXT