முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி லாரி விபத்தில் மேலும் ஒருவா் உயிரிழப்பு

Updated On : 15 மார்ச், 2026 at 8:14 PM
கோப்புப் படம்
பகிர்:

தூத்துக்குடியில் லாரி மோதிய விபத்தில் மேலும் ஒரு தொழிலாளி உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், சாயா்புரம் பி.எஸ். கோயில் தெருவைச் சோ்ந்த நாராயணசாமி மகன் வீரபாகு என்ற கண்ணன் (46). கூட்டாம்புளி முத்துநகரைச் சோ்ந்த வேல்கனி மகன் பிச்சைமணி (60). கட்டுமானத் தொழிலாளிகளான இவா்கள், கடந்த வெள்ளிக்கிழமை மடத்தூா் புறவழிச் சாலையில் பைக்கில் சென்றபோது, லாரி மோதியதாம்.

இதில், காயமடைந்த அவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பின்னா், வீரபாகு கண்ணன் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இந்நிலையில், தூத்துக்குடி மருத்துவமனையில் பிச்சைமணி சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். விபத்து குறித்து சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →