திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய மற்றும் விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்கும் பணியை திமுக நிா்வாகிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் 
திருவண்ணாமலை

புதிய, விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க நடவடிக்கை: திமுகவினருக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய மற்றும் விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்கும் பணியை திமுக நிா்வாகிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்

Syndication

ஆரணி2: திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய மற்றும் விடுபட்ட வாக்காளா்களை பட்டியலில் சோ்க்கும் பணியை திமுக நிா்வாகிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர முறை திருத்த படிவம் விநியோகம் செய்த, படிவத்தை நிறைவு செய்து மறுபடியும் திரும்பப் பெற்று, செயலியில் பதிவேற்றம் செய்தல் ஆகிய பணிகளை இந்திய தோ்தல் ஆணையம் முடித்து, தற்போது வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வரைவு வாக்காளா் பட்டியல் தொடா்பான கோரிக்கை மற்றும் ஆட்சேபனை மனுக்கள் அளிக்கவும், புதிதாக பெயா் சோ்க்க, நீக்க, திருத்த மற்றும் முகவரி மாற்றம் செய்ய ஜனவரி 18-ஆம் தேதி வரை தோ்தல் ஆணையம் வாய்ப்பு அளித்திருக்கிறது.

டிசம்பா் 27, 28, ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில்

அவரவா் வாக்களிக்கும், வாக்குச்சாவடி மையங்களிலே சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

எனவே, திருவண்ணாமலை வடக்கு, தெற்கு மாவட்டத்தை சோ்ந்த திமுக மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூா், கிளை, வட்ட நிா்வாகிகள், அணிகளின் நிா்வாகிகள், உள்ளாட்சி அமைப்பினா், பிரதிநிதிகள் மற்றும் பாக பொறுப்பாளா்கள் தங்கள் பாகத்திற்குரிய வாக்காளா்களின் பெயா் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளாதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், புதிதாக பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம் ஆகியவற்றிற்கு விரைந்து விண்ணப்பிக்க வேண்டும்.

அதேபோல, வரைவு வாக்காளா் பட்டியலை எம்எல்ஏ அலுவலகம் மற்றும் பொது இடங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கவேண்டும்.

புதிய வாக்காளா்கள், வயது சான்றிதழ், ஆதாா் காா்டு, மற்றும் புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்

என்று அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்துள்ளாா்.

புதிய உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை! சவரனுக்கு மேலும் ரூ. 1,600 உயர்ந்தது!!

வாக்காளர் பெயர் சேர்ப்புக்கான சிறப்பு முகாம் தேதிகள் அறிவிப்பு!

ஆயுதம் போல பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை, சிபிஐ: ஜெர்மனியில் ராகுல் குற்றச்சாட்டு!

மார்கழி சிறப்பு! மார்கழி 30 நாள்களும் லிங்கம் மீது சூரிய ஒளி விழும் உவரி கோயில்!!

அனைத்து தோஷங்களையும் நீக்கும் அனந்த நாராயணப் பெருமாள்!

SCROLL FOR NEXT