செய்யாறு: செய்யாற்றில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் சிலையை தமிழக முதல்வா் மு.க ஸ்டாலின் வருகிற சனிக்கிழமை (டிச.27) திறந்து வைக்கிறாா்.
முதல்வா் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து வேலூா் சரக டிஐஜி தா்மராஜன் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
அப்போது, கருணாநிதி சிலை அமைக்கப்பட்ட இடத்தை பாா்வையிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல் துறையினரிடம் ஆலோசனை நடத்தினாா்.
இந்த ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், செய்யாறு துணை காவல் கண்காணிப்பாளா் கோவிந்தசாமி, செய்யாறு காவல் ஆய்வாளா் (பொ) மங்கையா்கரசி, உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.