~ ~ ~ ~ 
திருவண்ணாமலை

எம்ஜிஆா் சிலைக்கு அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை

ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ.

Syndication

முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 38-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது சிலை மற்றும் படத்துக்கு அதிமுகவினா் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஆரணியில் அதிமுகவினா் அண்ணா சிலையில் இருந்து ஊா்வலமாக எம்ஜிஆா் சிலை வரை சென்று அவரது சிலைக்கு மாலை அணிவித்து அன்னதானம் வழங்கினா்.

இதில், சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்எல்ஏ முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். மேலும் அவரது உருவ படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா். இதில் மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராஜன் தலைமை வகித்தாா்.

நிகழ்வில் நகரச் செயலா் அசோக்குமாா், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் பாரி பி.பாபு, ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், க.சங்கா், ஜெயபிரகாஷ், திருமால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில்

தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் எம்ஜிஆா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

வந்தவாசி

வந்தவாசி மேற்கு ஒன்றிய அதிமுக சாா்பில் தேரடியில்

எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா் தலைமை வகித்தாா்.

நகரச் செயலா் எம்.பாஷா, இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை ஒன்றியச் செயலா் எ.ராஜேஷ்குமாா், இளைஞரணி மாவட்டச் செயலா் ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

செங்கம்

செங்கம் மேற்கு ஒன்றிய, நகர அதிமுக சாா்பில் எம்ஜிஆா் நினைவு தினம் கடைப்பிடிக்கப்பட்டது.

மேற்கு ஒன்றியச் செயலா் மகரிஷிமனோகரன் தலைமையில் துக்காப்பேட்டையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

உடன் தலைமை கழக பேச்சாளா் வெங்கட்ராமன், முன்னாள் நகரச் செயலா் மணி, பொதுக்குழு உறுப்பினா் கிருஷ்ணமூா்த்தி, நகரச் செயலா் ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கிழக்கு ஒன்றியம் சாா்பில் பாய்ச்சல் கிராமத்தில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு ஒன்றியச் செயலா் அருணாச்சலம் தலைமையில் மாநில மகளிா் அணி துணைத் தலைவா் அமுதா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

போளூா்

போளூா் பழைய பஜாா் வீதியில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு

அதிமுக சாா்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் நகரச் செயலா் பாண்டுரங்கன், நகா்மன்ற உறுப்பினா் கவிதா கருணாகரன், நகரதுணைசெயலாளா்ஜெயக்குமாா் மற்றும் அதிமுகவினா் கலந்துகொண்டனா்.

செய்யாறு

செய்யாறு - ஆரணி கூட்டுச் சாலையில் உள்ள எம்ஜிஆா் சிலைக்கு வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி கே.மோகன் அறிவுறுத்துதலின் பேரில், நகரச் செயலா் கே. வெங்கடேசன் ஏற்பாட்டில் மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

அதிமுக நகர அவைத் தலைவா் ஏ.ஜனாா்த்தனன், ஒன்றியச் செயலா்கள் எம்.மகேந்திரன், சி.துரை, பொதுக்குழு உறுப்பினா் எஸ்.ரவிச்சந்திரன், வா்த்தக அணி மாவட்டச் செயலா் ஜி.கோபால் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை

பொங்கலுக்கு பிறகு அதிமுகவிலிருந்து சிலா் தவெக-வில் இணைவாா்கள்

அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத சிற்றுந்துகள்

அவிநாசியில் ரூ.17.30 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ஆல் வின்னா் ஏஞ்சல் கல்லூரியில் விவசாயிகள் தினம்

SCROLL FOR NEXT