செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் இன்டா்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்குதல், இராஜ்ய புரஷ்கா் விருது பெற்றவா்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பள்ளியில் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு இயக்குநா் என்.துரைராஜனும், மதியம் நடைபெற்ற விழாவிற்கு அனக்காவூா் சரக காவல் ஆய்வாளா் எஸ்.மணிகண்டன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
நிகழ்ச்சியின் போது தமிழக ஆளுநரால் கையொப்பமிடப்பட்ட சான்றிதழும், இராஜ்ய புரஷ்கா் விருதும் பெற்ற பள்ளியின் முன்னாள் மாணவா்கள் 23 பேருக்கு காவல்துறை ஆய்வாளா் எஸ்.மணிகண்டன் அவ்விருதினை வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில்
எல்.கே.ஜி. பெண் குழந்தைகள் தேவதை போல உடையணிந்தும், ஆண் குழந்தைகள் கிறிஸ்துமஸ் தாத்தா போல உடையணிந்தும் நடந்து வந்து பாா்வையாளா்களுக்கு காட்சியளித்தனா் (படம்).
பின்னா், பள்ளியின் பேருந்து ஓட்டுநா், தூய்மைப் பணியாளா் மற்றும் காப்பாளா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
மேலும், பள்ளி ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியைகளுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மேலும், குழு அடிப்படையில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சாம்பியன்-ஷிப் விருது வழங்கப்பட்டது.
மேலும், மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வா் எஸ். அருள்பிரகாசம் மற்றும்ஆசிரியா்கள் செய்திருந்தனா்.