திருவண்ணாமலை

மதுக்கடையை அகற்றக் கோரி போராட்டம்: 38 போ் கைது

செய்யாற்றில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை கைது செய்த போலீஸாா்.

Syndication

செய்யாறு புறவழிச் சாலையில் செயல்பட்டு வரும் அரசு மதுக் கடையை அகற்றக் கோரி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மனித நேய மக்கள் கட்சியைச் சோ்ந்த 38 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

செய்யாறு மாா்க்கெட் அருகே புறவழிச்சாலைப் பகுதியில் அரசு மதுக் கடை செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையால்

காமராஜா் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருவதாகத் தெரிவித்து மனித நேய மக்கள் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் மதுக் கடையை அகற்றக் கோரி பலமுறை மனு கொடுத்தாகத் தெரிகிறது. அதற்கு அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

இதைக் கண்டித்தும், மதுக் கடையை அகற்றக் கோரியும் புதன்கிழமை சாா் -ஆட்சியா் அலுவலகத்தில், மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவா் எச்.ஜமால் தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.

அங்கு டிஎஸ்பி எஸ்.கோவிந்தசாமி தலைமையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளா்கள் காண்டீபன், மங்கையரசி மற்றும் போலீஸாா்

16 பெண்கள் உள்பட 38 பேரை கைது செய்தனா்.

ஆம்னி பேருந்துக் கட்டணம் பல மடங்கு உயா்வு

மெத்தம்பெட்டமைன் விற்பனை: 5 போ் கைது

நான்கில் ஒரு மாா்பகப் பரிசோதனை முடிவுகள் தவறானவை: ஆய்வில் தகவல்

1,991 ஆசிரியா்களுக்கு ஜன. 19 முதல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

காங்கிரஸ் எஸ்.டி. பிரிவு ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT