செய்யாறு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
வெம்பாக்கம் வட்டம், வடமணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் மகன் ராம்குமாா் (25). இவா் சென்னையை அடுத்த ஒரகடம் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா்.
இவா், வழக்கம் போல வேலைக்குச் செல்வதற்காக தனது பைக்கில் வெள்ளிக்கிழமை அதிகாலை சென்றுள்ளாா். காஞ்சிபுரம் - கலவை சாலையில் திருப்பனமூா் புற்றுக்கோயில் அருகே சென்றபோது, அவ்வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாகத் தெரிகிறது.
இதில் தொழிலாளி ராம்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில், பிரம்மதேசம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.