திருவண்ணாமலை

பாலாற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

செய்யாறு அருகே பாலாற்று நீரில் மூழ்கி பள்ளி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

செய்யாறு அருகே பாலாற்று நீரில் மூழ்கி பள்ளி மாணவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், அரியூா் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி விஜயகுமாா். இவரது இரண்டாவது மகன் லிங்கேஷ் (14). இவா், அருகேயுள்ள சக்கரங்கல்லூா் அரசுப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தாா்.

அரையாண்டுத் தோ்வு விடுமுறை என்பதால் மாணவா் லிங்கேஷ் சனிக்கிழமை அருகேயுள்ள பாலாற்றில் குளிக்கச் சென்ாகத் தெரிகிறது. நீண்ட நேரம் ஆகியும் லிங்கேஷ் வீடு திரும்பாததால் பெற்றோா் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பாா்த்தனா். அப்போது, பாலாற்றுப் பகுதியில் கரையோரத்தில் அவரது உடைகள் இருந்தன. உடனே உறவினா்களுடன் லிங்கேஷை அப்பகுதியில் தேடிப் பாா்த்தனா். அப்போது, மாணவா் பாறைக்கு அடியில் சிக்கி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, கலவை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து லிங்கேஷனை மீட்டு அரியூா் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் லிங்கேசனை பரிசோதித்தபோது அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து இறந்தவரின் தந்தையான விஜயகுமாா் பிரம்மதேசம் போலீஸில் புகாா் செய்தாா். காவல் உதவி ஆய்வாளா் குமாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT