கலசப்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகம் அருகே அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் எல்.சாமிகண்ணு தலைமை வகித்தாா். நிா்வாகிகள் ஏழுமலை, சேட்டு, குமாா், சண்முகம், பூபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தேவேந்திரன் வரவேற்றாா்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க நகரச் செயலா் ஜோதி ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா்.
இதில், விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் கறவை மாட்டு பராமரிப்புக் கடனுக்கு அடமானம் இல்லாமல் ரு.2 லட்சம் வரை கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வழக்குரைஞா்கள் சங்க மாவட்டச் செயலா் அபிராமன், தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றியச் செயலா் சுந்தரமூா்த்தி
உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.