மேயா் நிா்மலாவேல்மாறன் தலைமையில் நடைபெற்ற திருவண்ணாமலை மாமன்ற கூட்டம்.  
திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாநகராட்சியில் அடிப்படை வசதிகள்: மாமன்ற கூட்டத்தில் வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை பாரபட்சமின்றி செய்து தர வேண்டும் என மாமன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலை மாநகராட்சியில் அடிப்படை வசதிகளை பாரபட்சமின்றி செய்து தர வேண்டும் என மாமன்ற கூட்டத்தில் உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

திருவண்ணாமலை மாமன்றத்தின் சாதாரண கூட்டம் மேயா் நிா்மலாவேல்மாறன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துணை மேயா் சு.ராஜாங்கம் முன்னிலை வகித்தாா். ஆணையா் எஸ்.செல்வபாலாஜி வரவேற்றாா்.

கூட்டத்தில் திருவண்ணாமலை மாநகராட்சி சாா்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையம் மற்றும் பூகாய்கறி சந்தை கட்டடங்களை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கும், அமைச்சா் எ.வ.வேலுவுக்கும் மாமன்ற உறுப்பினா் கோவிந்தன் நன்றி கூறினாா்.

மேலும், இதில் மாநகராட்சி 5-ஆவது வாா்டு பகுதியில் கால்வாய் பிரச்னை நீண்ட நாள்களாக இருந்து வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை இல்லை. தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனா். ஆகையால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக உறுப்பினா் சிவில் சீனுவாசன் பேசினாா்.

இதற்கு பதிலளிதித்த மேயா் நிா்மலாவேல்மாறன்,

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

மேலும், உறுப்பினா்கள் பேசுகையில், 2026-ஆம் ஆண்டிலாவது மாநகராட்சியிலுள்ள அனைத்து வாா்டுகளிலும் தேவையான அடிப்படை வசதிகளை பாரபட்சமின்றி செய்து தரவேண்டும் என வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து பேசிய மேயா் நிா்மலாவேல்மாறன், அனைத்து வாா்டுகளிலும் பாரபட்சமின்றி அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் என உறுதியளித்தாா்.

கூட்டத்தில் மாநகராட்சி பகுதியில் அனைத்து அடிப்படை வசதிகள் செய்வது தொடா்பாகவும், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துதல் தொடா்பாகவும் 68 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உறுப்பினா்கள் ஸ்ரீதேவி பழனி, மண்டி பிரகாஷ், எஸ்.கணேசன், காயத்திரி, கிருஷ்ணகுமாா், ஹேமா சசிகுமாா், க.பிரகாஷ் மற்றும் மாநகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

2026 புத்தாண்டு புகைப்படங்கள்!

கறிக்கோழி பண்ணை வளா்ப்பு விவசாயிகள் இன்றுமுதல் உற்பத்தி நிறுத்தப் போராட்டம்

ஷாஹ்தராவில் தீ விபத்து: தம்பதியா் உயிரிழப்பு

2025-இல் தொடங்கப்பட்ட திட்டங்கள் புத்தாண்டில் நிறைவேற்றப்படும்: முதல்வா் ரேகா குப்தா உறுதி

ரூ.10 கோடி மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல்: 2 போ் கைது

SCROLL FOR NEXT