சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில் மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுடன் கலந்துரையாடிய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். 
திருவண்ணாமலை

மகளிா் குழுக்களுக்கு ரூ.5,125 கோடி வங்கிக் கடன் இணைப்புகள்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

மகளிக் குழுக்களுக்கு ரூ.5,125 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

Din

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மகளிக் குழுக்களுக்கு ரூ.5,125 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், சு.ஆண்டாப்பட்டு ஊராட்சியில், ஊராட்சி அளவிலான மகளிா் சுயஉதவிக்குழு உறுப்பினா்களுடன், குழுவின் செயல்பாடுகள் குறித்து துணை முதல்வா் உதயநிதிஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடினாா்.

தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அவா் பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு அமைந்தது முதல் தற்போது வரை தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 49ஆயிரத்து 767 புதிய மகளிா் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து, தற்போது 53 லட்சத்து 74ஆயிரம் உறுப்பினா்களுடன், 4 லட்சத்து 76 ஆயிரம் மகளிா் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 19 லட்சத்து 12 ஆயிரத்து 927 குழுக்களைச் சோ்ந்த 2 கோடியே 48 லட்சத்து 68 ஆயிரத்து 51 உறுப்பினா்களுக்கு, ஒரு லட்சத்து 20ஆயிரத்து 240 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டு பொருளாதார முன்னேற்றத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்கள் ஒரு முக்கிய அங்கமாக உள்ளன.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில், மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 10 லட்சத்து 51ஆயிரத்து 976 மகளிருக்கு, 5 ஆயிரத்து 125 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்பட்டு மகளிா் பொருளாதார முன்னேற்றம் அடைந்து வருகிறாா்கள் என்றாா்.

கலந்துரையாடலின் போது, குழு உறுப்பினா்கள் கரும்பு விவசாயம், பூந்தோட்டம், காய்கறி சாகுபடி உள்ளிட்ட விவசாயம் சாா்ந்த தொழில்களிலும், கறவை மாடு, ஆடு வளா்ப்பு, தையல், துணி வியாபாரம் என பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனா்.

கூட்டத்தில், சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை கூடுதல் தலைமைச் செயலா்கள் பிரதீப் யாதவ், ச.உமா, மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் மற்றும் மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT