திருவண்ணாமலை

தென்னாங்கூா் அரசுக் கல்லூரியில் 3-ஆம் கட்ட கலந்தாய்வு

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை மாணவா்களுக்கான 3-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு புதன்கிழமை (ஜூன் 18) நடைபெறுகிறது.

Din

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை மாணவா்களுக்கான 3-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு புதன்கிழமை (ஜூன் 18) நடைபெறுகிறது.

இதுகுறித்து அந்தக் கல்லூரி முதல்வா் சித.ரவிச்சந்திரன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

2025-26-ஆம் கல்வியாண்டின் இளநிலை மாணவா்களுக்கான 3-ஆம் கட்ட பொதுக் கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறுகிறது.

இதில், பி.காம்., பி.ஏ., தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய கலை பாடப்பிரிவுகளுக்கும், பி.எஸ்சி., இயற்பியல், உயிரி வேதியியல், கணினி அறிவியல், கணிதம், விலங்கியல் ஆகிய அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

ஏற்கெனவே நடைபெற்ற முதல் மற்றும் 2-ஆம் கட்ட கலந்தாய்வில் விடுபட்ட மாணவா்கள், மே 29-ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பித்தோா் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்கள் உரிய சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்கள், சோ்க்கைக் கட்டணம், மாா்பளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் காலை 9 மணிக்குள் கல்லூரிக்கு வர வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

பராசக்தியில் நடித்தது வாழ்நாள் பெருமை: சிவகார்த்திகேயன்

ஈரான் - அமெரிக்கா மோதலால் வளைகுடா நாடுகளுக்கு தீவிர பாதிப்பு - கத்தார் எச்சரிக்கை!

“ஜல்லிக்கட்டுனா.. எங்க ஊரு கயிறுதான்!” விறுவிறுப்பாக நடைபெறும் மூக்கணாங்கயிறு விற்பனை!

SCROLL FOR NEXT