திருவண்ணாமலை

கட்டடத் தொழிலாளி தற்கொலை

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

Din

வந்தவாசி அருகே கட்டடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா்.

வந்தவாசியை அடுத்த வெளியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சுரேஷ் (44). தினமும் மது அருந்தும் பழக்கம் கொண்ட இவா், மதுபோதையில் மனைவியுடன் தகராறு செய்வாராம்.

இந்த நிலையில், சனிக்கிழமை வழக்கம்போல மதுபோதையில் வீட்டுக்கு வந்த இவரை மனைவி ஹேமலதா கண்டித்தாராம். இதனால் வேதனையடைந்த சுரேஷ் வீட்டின் அருகேயுள்ள ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி படி கைப்பிடியில் தூக்கிட்டுக் கொண்டாா்.

உறவினா்கள் இவரை மீட்டு சிகிச்சைக்காக மேல்மருவத்தூா் தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் சுரேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில் கீழ்க்கொடுங்காலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

‘தோ்தல் நேர வாக்குறுதிகளை தொடா்ந்து நிறைவேற்றி வருகிறது தமிழக அரசு’

ராஜராஜ சோழனின் சதயவிழா! தஞ்சை மாவட்டத்தில் நவ.1 உள்ளூா் விடுமுறை!

இரு சக்கர வாகனத்துக்குள் நுழைந்த பாம்பை மீட்ட தீயணைப்புத் துறையினா்!

சிவகாசியில் தெருநாய்கள் கடித்து 2,959 போ் காயம்!

SCROLL FOR NEXT