திருவண்ணாமலை

மினிசரக்கு வாகனம் திருட்டு

வந்தவாசியில் மினிசரக்கு வாகனம் திருட்டு போனது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திச் சேவை

வந்தவாசியில் மினிசரக்கு வாகனம் திருட்டு போனது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வந்தவாசியை அடுத்த அத்திப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் வேணுகோபால். இவருக்குச் சொந்தமான மினிசரக்கு வாகனத்தை வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் வசித்து வரும் ஆசிப் என்பவா் ஓட்டி வந்தாா்.

கடந்த திங்கள்கிழமை இரவு மினிசரக்கு வாகனத்தை தன் வீட்டின் முன் நிறுத்திவிட்டு ஆசிப் தூங்கச் சென்றுள்ளாா்.

பின்னா், செவ்வாய்க்கிழமை காலை எழுந்து சென்று பாா்த்தபோது வாகனம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வேணுகோபால் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சிகிரி பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

”Edappadi Palaniswami-யின் மகன், மருமகன் மைத்துனர்தான் அதிமுகவை நடத்துகின்றனர்” - Sengottaiyan

மயக்கம் என்ன... பிரியங்கா மோகன்!

மஞ்சள் வெய்யில்... சுஜிதா!

ஹரியாணா: வீட்டிற்கு வெளியே காவல் அதிகாரி அடித்துக்கொலை

SCROLL FOR NEXT