குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்று விசாரணை நடத்திய மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ். 
திருவண்ணாமலை

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 792 கோரிக்கை மனுக்கள்

திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 792 மனுக்கள்

Syndication

ஆரணி/செய்யாறு: திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு ஆகிய இடங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 792 மனுக்கள் வரப்பெற்றன.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 671 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினாா்.

பின்னா், மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். மேலும், நிலுவையில் உள்ள மனுக்களின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மைத் துறை சாா்ந்த பயிா்க் கடன்கள், புதிய நீா்தேக்கத் தொட்டி அமைத்துத் தருதல், தாட்கோ மூலம் கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிா்க் கடன்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 671 மனுக்கள் வரப்பெற்றன.

கூட்டத்தில் பெண்கள், வயதானவா்கள், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்று மனு அளித்தனா்.

நலத்திட்ட உதவி

மேலும், ஆட்சியா் தாட்கோ சாா்பில் தூய்மைப் பணியாளா் நல வாரிய உறுப்பினா் அலமேலு என்பவா் இயற்கை எய்தியதால் இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதி உதவியாக ரூ.25ஆயிரத்திற்கான காசேலையை அவரது கணவா் ஏழுமலையிடம் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன் மற்றும் அனைத்துத் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ஆரணியில் 65 மனுக்கள்

ஆரணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 65 மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கப்பட்டது.

செய்யாறு

செய்யாற்றில், வருவாய் கோட்ட அளவிலான குறைதீா்

கூட்டம் சாா் -ஆட்சியா் அலுவலகத்தில் சாா்- ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின் தலைமையில் நடைபெற்றது. செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் சாா்பில் வீட்டுமனைப் பட்டா கோரி 4 பேரும், நிலம் திருத்தம் கோரி இருவரும், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 4 பேரும், பட்டா மாற்றம் கோரி 11 பேரும், தமிழ் நிலம் திருத்தம் கோரி 14 பேரும், நில அளவீடு செய்யக் கோரி 6 பேரும், இதர மனுக்கள் 9 போ் உள்பட மொத்தம் 56 மனுக்கள் அளித்து இருந்தனா்.

கூட்டத்தில் வருவாய்துறை, ஊராட்சித்துறை அலுவலா்கள் என பலா் பங்கேற்றனா்.

செய்யாற்றில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்ற சாா் -ஆட்சியா் எல்.அம்பிகா ஜெயின்.

மஹிபால்பூரில் தண்ணீரை சூடுபடுத்தும் போது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயரிழப்பு

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

தில்லி வெடிவிபத்து: தலைவா்கள் இரங்கல்

தில்லி குண்டுவெடிப்பு எதிரொலி: திருமலையில் சோதனை

மகர ராசிக்கு தெளிவு.. தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT