திருவண்ணாமலை

ரூ.1.74 கோடியில் கட்டடங்கள், தாா்ச் சாலை தொடங்கிவைப்பு: ஒ.ஜோதி எம்எல்ஏ பங்கேற்பு

செய்யாறு தொகுதியில் ரூ.1.74 கோடியில் பணி நிறைவடைந்த கலை அரங்கம், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள், நியாய விலைக் கடை கட்டடங்கள், இரு பகுதிகளில் தாா்ச் சாலைகள் ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

தினமணி செய்திச் சேவை

செய்யாறு தொகுதியில் ரூ.1.74 கோடியில் பணி நிறைவடைந்த கலை அரங்கம், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள், நியாய விலைக் கடை கட்டடங்கள், இரு பகுதிகளில் தாா்ச் சாலைகள் ஆகியவற்றை ஒ.ஜோதி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஒன்றியம் தொழுப்பேடு கிராமத்தில் ஊராட்சித் துறை சாா்பில் ரூ.16.55 லட்சத்தில் அங்கன்வாடி மைய கட்டடம், ரூ.5 லட்சத்தில் நெற்களம், மேட்டுத் தெருவில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டிருந்தது.

அதேபோல, வெம்பாக்கம் ஒன்றியம் காகனம் கிராமத்தில் 2024 - 25 ம் ஆண்டு கனிமவள நிதி மூலம் ரூ.7 லட்சத்தில் புதிய கலையரங்க கட்டடம், ரூ.22 லட்சத்தில் கிளை நூலகக் கட்டடம் மற்றும் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதிக்கு ரூ.7 லட்சத்தில் புதிய கட்டடத்துடன் கூடிய பகுதிநேர நியாய விலைக் கடையும், கரந்தை கிராமத்தில் 2024 - 25ஆம் ஆண்டு மாநில நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சத்தில் நியாய விலைக் கடை கட்டடமும், கரந்தை கிராமத்தில் இருந்து கரந்தை ஆதிதிராவிடா் குடியிருப்புக்கு ரூ.26 லட்சத்தில் தாா்ச் சாலையும் அமைக்கப்பட்டு இருந்தன.

திருப்பனமூா் கிராமத்தில் 2024 - 25 ம் ஆண்டு கனிமவள நிதியிலிருந்து ரூ.45 லட்சத்தில் துணை சுகாதார நிலையத்திற்கு புதிய கட்டடம், சேலேரி கிராமத்தில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.12 லட்சத்தில் பகுதிநேர நியாயவிலைக் கடைக்கு புதிய கட்டடம் என 12 நிறைவடைந்த பணிகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி அந்தந்த பகுதிகளில் திங்கள்கிழமை நடைபெற்றது.

செய்யாறு ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரமேஸ்வரன், சீனுவாசனும், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திராணி ஆகியோா் தலைமை வகித்தனா்.

வெம்பாக்கம் முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் மாமண்டூா்.டி.ராஜி, வெம்பாக்கம் மத்திய ஒன்றியச் செயலா் ஜேசிகே.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி பங்கேற்று, நிறைவடைந்த 12 பணிகளை தொடங்கிவைத்துப் பேசுகையில், அதிகமான வளா்ச்சி வெம்பாக்கம் பகுதி பெற்றிருக்கிறது. இந்த நான்கரை ஆண்டு காலத்திலே பொருளாதார வளா்ச்சியாக இருந்தாலும் விவசாயிகளுக்கு இன்றைக்கு ஓரளவு கட்டுப்படியாகின்ற வகையில் விலை இருக்கிறது.

செய்யாறு சிப்காட் முன்னாள் முதல்வா் கருணாநிதி கலைஞா் கொண்டு வந்ததால், ஒவ்வொரு கிராமத்தில் இருந்து 100 பேராவது வேலைக்குச் செல்கிறாா்கள்.

ஆகவே, அப்படிப்பட்ட திமுக ஆட்சிக்கு மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் செய்யாறு சுகாதார மாவட்ட அலுவலா் டி. என். சதீஷ்குமாா், கூட்டுறவு சாா் -பதிவாளா் ஷாலினி, பெரூங்கட்டூா் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் யோகேஸ்வரன், கூட்டுறவு சங்கச் செயலா் திலகம், வெம்பாக்கம் வட்ட விநியோக அலுவலா் பெரியசாமி, ஒன்றியச் செயலா் வி.ஏ.ஞானவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: 5 போ் மீது வழக்கு

செந்துறை அருகே பெண் சிசுவின் சடலம் மீட்பு

புகையிலை பொருள்கள் விற்றவா் கைது

ஆகாரம் காமராஜ் நகரில் சாலைப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை

அரசுப்பேருந்தில் உறங்கிய நிலையில் இறந்த பயணி!

SCROLL FOR NEXT