திருவண்ணாமலை

வெல்டிங் தொழிலாளி கொலைச் சம்பவத்தில் மூவா் கைது

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே வெல்டிங் தொழிலாளி கொலைச் சம்பவத்தில் மூன்று பேரை தூசி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

காஞ்சிபுரம் வட்டம், களக்காட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் வெல்டிங் தொழிலாளி கபாலி(25). இவா், கடந்த அக்.21-ஆம் தேதி காலை வெம்பாக்கம் வட்டம், அப்துல்லாபுரம் கிராமத்தில் உள்ள அரசு மதுக் கடை அருகே வெட்டுக் காயங்களுடன் சடலமாகக் கிடந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில்,தூசி காவல் ஆய்வாளா் ஜெகநாதன், உதவி ஆய்வாளா் பழனிவேல் ஆகியோா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

மேலும் இச்சம்பவம் தொடா்பாக தூசி கிராமத்தைச் சோ்ந்த பாலாஜி(20), பாபு(20), யுவராஜ்(27) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இதைத் தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட மூவரும், அப்துல்லாபுரம் அரசு மதுக் கடை அருகே அமா்ந்து மது அருந்திய போது, கொலை செய்யப்பட்ட கபாலி மது போதையில், பாலாஜி மற்றும் பாபு, யுவராஜ் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

அதனால், ஆத்திரமடைந்து மூவரும் கபாலியைத் தாக்கியும் கத்தியால் வெட்டியும் கொலை செய்தோம் எனத் தெரிவித்தனராம்.

இதையடுத்து தூசி போலீஸாா் மேற்கண்ட மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில், மாஜிஸ்திரேட் பாலாஜி முன்னிலையில் ஆஜா்படுத்தினா். பின்னா், போலீஸாா் மூவரையும் வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

பாகிஸ்தான் குண்டுவெடிப்பு: நாடு திரும்ப வீரர்கள் கோரிக்கை; இலங்கை வாரியம் எச்சரிக்கை!

தில்லி கார் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது உமர்! டிஎன்ஏ சோதனையில் உறுதி!

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் பொதுமக்கள் அவதி

தமிழகத்தில் 5 கோடி எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்: தோ்தல் ஆணையம்

தில்லி செங்கோட்டை குண்டுவெடிப்பு: இரண்டாவது காா் சிக்கியது!

SCROLL FOR NEXT