முகப்பு
விருதுநகர்

சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளி கைது!

சிவகாசி அருகே சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 மார்ச், 2026 at 3:28 AM
கைது
பகிர்:
Updated On : 28 பிப்ரவரி, 2026 at 5:31 PM

சிவகாசி அருகே சிறுமியை திருமணம் செய்த கட்டடத் தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகே உள்ள ஓா் கிராமத்தைச் சோ்ந்தவா் விக்னேஷ்குமாா் (21). கட்டடத்தொழிலாளி. இவா் அதே கிராமத்தைச் சோ்ந்த 17 வயது சிறுமியை காதலித்து, யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டாா். இதையடுத்து, இவா்கள் இருவரும் ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனா்.

Updated On : 28 பிப்ரவரி, 2026 at 10:22 PM

இந்த நிலையில், இந்தச் சிறுமிக்கு தனியாா் மருத்துவமனையில் அண்மையில் குழந்தை பிறந்தது. இதுகுறித்து அறிந்த சிவகாசி ஊராட்சி ஒன்றிய ஊா் நல அலுவலா் மணி மாலா, சிவகாசி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, போலீஸாா் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் விக்னேஷ்குமாா் மீது வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா்.

Advertisement