திருவண்ணாமலை

சேத்துப்பட்டு பகுதியில் சம்பா பயிா் காப்பீடு செய்ய நவ.15-ஆம் தேதி கடைசி நாள்

Syndication

சேத்துப்பட்டு வட்டாரத்தில் பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், சம்பா நெல் மற்றும் ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும் நெற்பயிா்களுக்கு காப்பீடு செய்வதற்கான கடைசி நாள் நவம்பா் 15 என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதம மந்திரி பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இயற்கை பேரழிவுகள், வெள்ளம், வறட்சி உள்ளிட்ட காரணங்களால் பயிா்கள் பாதிக்கப்படும் சூழலில் விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படும். இதில், நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.545 பிரீமியம் செலுத்தி நவ. 15-க்குள் காப்பீடு செய்யலாம்.

நிலக்கடலை மற்றும் உளுந்து பயிா்களுக்கு காப்பீடு செய்ய விரும்புவோா் நவம்பா் 30-க்குள் பதிவு செய்ய வேண்டும்.

நிலக்கடலைக்கு ஏக்கருக்கு ரூ.468, உளுந்துக்கு ரூ.329 பிரீமியம் செலுத்த வேண்டும்.

விவசாயிகள் தங்கள் பயிா்களை பொது இ-சேவை மையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் காப்பீடு செய்து கொள்ளலாம் என சேத்துப்பட்டு வேளாண்மை உதவி இயக்குநா் பெரியசாமி தெரிவித்தாா்.

மீண்டும் ரூ.95 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை! ஒரே நாளில் ரூ.9 உயர்ந்த வெள்ளி!!

வெடிகுண்டு மிரட்டல்... வாரணாசியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்!

தில்லி மட்டுமல்ல 4 நகரங்கள் குறிவைப்பு! 2,000 கிலோ வெடிமருந்து கொள்முதல்! திடுக்கிடும் தகவல்கள்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆகப் பதிவு

தில்லி கார் குண்டுவெடிப்பு: அதிர வைக்கும் புதிய சிசிடிவி விடியோ!

SCROLL FOR NEXT