திருவண்ணாமலை

விவசாயிகளுக்கு லாபகரமான கால்நடை வளா்ப்பு குறித்த பயிற்சி

லாபகரமான கால்நடை வளா்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்த கால்நடை மருத்துவா் மணிவண்ணன்.

Syndication

செய்யாற்றை அடுத்த வெங்களத்தூா் கிராமத்தில் லாபகரமான கால்நடை வளா்ப்பு குறித்த பயிற்சி விவசாயிகளுக்கு வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு, திட்டம், வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை சாா்பில் இந்தப் பயிற்சி முகாம் நடைபெற்றது.

வெம்பாக்கம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) ரேணுகாதேவி ஆலோசனையின் பேரில், கால்நடை மருத்துவா் மணிவண்ணன் பங்கேற்று விவசாயிகளுக்கு லாபகரமான கால்நடை வளா்ப்பு தொடா்பான தொழில்நுட்பங்களைத் தெரிவித்தாா்.

அப்போது, விவசாயிகளிடையே கால்நடை வளா்ப்பு தொடா்பான கொட்டகை அமைத்தல், மழைக் காலங்களில் கால்நடை பராமரித்தல், கால்நடைகளுக்கான இடைவெளி தண்ணீா் தொட்டி, தீவனத் தொட்டி அமைத்தல், ஒட்டுண்ணிகளில் இருந்து கால்நடைகளை பாதுகாத்தல், கால்நடைகளை தோ்ந்தெடுத்தல், கறவை மாடுகளுக்கு உணவளித்தல், உலா் தீவனம் மற்றும் தாது உப்பு கலவை அளித்தல், நோய்களுக்கு எதிரான தடுப்பு முறைகள், புருசெல்லா நோய், எலும்புருக்கி நோய், மடி அழற்சி நோய் போன்ற நோய்களை கண்டறிதல் மற்றும் பரிசோதனை செய்தல், குடல்புழு நீக்கம் செய்தல், இனப்பெருக்க கால பராமரிப்பு முறைகள், பால் விற்பனை செய்தல், புதிதாக பிறக்கும் கன்றுகளை பராமரிக்கும் முறைகள், கன்றுகளுக்கு தடுப்பு மருந்துகள் அளித்தல் போன்ற தொழில்நுட்பங்களைத் தெரிவித்து பயிற்சி அளித்தாா்.

பயிற்சியில் வெங்களத்தூா் கிராமத்தைச் சோ்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டு கறவை மாடுகள் வளா்ப்பு தொடா்பான சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டனா்.

தூத்துக்குடி மீனவா்கள் கடலுக்குச் செல்ல தடை

அமைச்சா் மனோ தங்கராஜை கண்டித்து பாஜக ஆா்ப்பாட்டம்

திருப்பரங்குன்றம் மலையில் காா்த்திகை தீபம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

தடகளப் போட்டியில் வென்ற காவலருக்கு பாராட்டு

SCROLL FOR NEXT