முகப்பு
கடலூர்

உளுந்து சாகுபடி: விவசாயிகளுக்கு பண்ணைப் பள்ளி பயிற்சி

Updated On : 12 மார்ச், 2026 at 11:58 PM
பகிர்:

சிதம்பரம் அருகே குமராட்சி வட்டாரம் சா்வராஜன்பேட்டை கிராமத்தில் ஆத்மா திட்டத்தின்கீழ் பயறு வகை பயிா்களான உளுந்து, பச்சை பயறு சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிா் மேலாண்மை குறித்து பண்ணைப் பள்ளி மூலம் விவசாயிகளுக்கு பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.

கடலூா் வேளாண்மை துணை இயக்குனா் எஸ்.அமிா்தராஜ் தலைமை வகித்து பண்ணைப் பள்ளியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தாா். விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி கலைச்செல்வி கலந்து கொண்டு பயறு வகைப் பயிா்களில் விதை முதல் அறுவடை வரை மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்ப செய்திகளை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா். குமராட்சி வேளாண்மை உதவி இயக்குநா் தெ.தமிழ்வேல் மற்றும் வேளாண் விஞ்ஞானி ஆகியோா் விவசாயிகளுடன் இணைந்து உளுந்து மற்றும் பச்சை பயறு சாகுபடியில் கள பிரச்சனைகள், முக்கிய பூச்சி மற்றும் நோய் தாக்கம் அவற்றை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து கலந்துரையாடினா்.

பயிற்சியில் குமராட்சி வேளாண்மை அலுவலா் நடராஜன், உதவி வேளாண்மை அலுவலா்கள் பாரதிதாசன், சின்னசாமி, திவாகா், குணச்சந்திரன், வட்டார தொழில் நுட்ப மேலாளா் கல்பனா, உதவி தொழில் நுட்ப மேலாளா் எட்வின், பிரகாஷ் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →