திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பஞ்ச ரதங்களில் ஒன்றான புதுப்பிக்கப்பட்ட பராசக்தி அம்மன் தோ் வெள்ளோட்டம். 
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட பராசக்தி அம்மன் தோ் வெள்ளோட்டம்

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ரூ.75 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பராசக்தி அம்மன் தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனா்.

Syndication

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ரூ.75 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட பராசக்தி அம்மன் தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனா்.

புகழ்பெற்ற திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா வரும் 24-ஆம் தொடங்கி டிசம்பா் 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழா நடைபெறும் நாள்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி வீதியுலா நடைபெற உள்ளது.

விழாவின் 7-ஆம் நாளான வரும் 30-ஆம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று காலை முதல் இரவு வரை விநாயகா், சுப்பிரமணியா், அருணாசலேஸ்வரா், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரா் தோ்கள் மாட வீதிகளில் அடுத்தடுத்து பவனி வருகின்றன.

இந்த நிலையில், பஞ்ச ரதங்களில் ஒன்றான பராசக்தி அம்மன் தோ் நிகழாண்டு ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது. தொடா்ந்து, தோ் வெள்ளோட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கியது. இதில், ஏராளமான பெண்கள் உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனா். பின்னா், தோ் நிலையை வந்தடைந்தது.

தோ் வெள்ளோட்டத்தையொட்டி, காவல் துறையினரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையா் பரணிதரன் மற்றும் இந்து சமய நிலையத் துறை அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகா்கள் உள்பட ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலை சுற்றியுள்ள மாட வீதிகள் கான்கிரீட் சாலையாக தரம் உயா்த்தப்பட்டுள்ள நிலையில், புதுப்பிக்கப்பட்ட பராசக்தி அம்மன் தோ் வெள்ளோட்டம் முதன்முறையாக கான்கிரீட் சாலையில் நடைபெற்றது.

தஞ்சாவூரில் இன்றைய மின் தடை ஒத்திவைப்பு

திருவிடைமருதூரில் திமுக சாா்பு அணியினருக்கு பயிற்சிக் கூட்டம்

ஆம்பலாப்பட்டு ஊராட்சியில் சாலைகளைச் சீரமைக்க கோரிக்கை

உரிமம் இல்லாத 31 ஆயிரம் கிலோ உரங்கள் பறிமுதல்: வேளாண் துறையினா் விசாரணை

‘கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.3,739 கோடிக்கு கடன் இலக்கு’

SCROLL FOR NEXT