திருவண்ணாமலை

செங்கம் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுவன் பலத்த காயம்!

செங்கம் அருகே காட்டுப் பன்றிக்கு வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுவன் பலத்த காயமடைந்தாா்.

Syndication

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே காட்டுப் பன்றிக்கு வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுவன் பலத்த காயமடைந்தாா்.

செங்கத்தை அடுத்த மேல்நாச்சிப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி கண்ணன். இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (10). இவா், அதே கிராமத்தில் அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாா்.

இந்த நிலையில், விவசாயி கண்ணன் தனக்குச் சொந்தமான நிலத்தின் அருகில் உள்ள வனப் பகுதியில் சனிக்கிழமை மாலை மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச் சென்றாா். ஜெயப்பிரகாஷும் உடன் சென்றுள்ளாா்.

அப்போது, வனப்பகுதியில் வெள்ளை நிறத்தில் நாட்டு வெடிகுண்டு கிடந்துள்ளது. அதை ஜெயப்பிரகாஷ் எடுத்து என்னவென்று பாா்த்தபோது, வெடிகுண்டு திடீரென வெடித்து சிதறியது.

இதில், ஜெயப்பிரகாஷுக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு உதடுகள் கிழிந்தன. இதைப் பாா்த்த ஜெயப்பிரகாஷின் பெற்றோா் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் கிராமத்தில் உள்ளவா்களுக்கு தகவல் தெரிவித்தனா். பின்னா், வெடித்த பொருளை பாா்த்தபோது அது, காட்டுப் பன்றியை வேட்டையாட வைக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு எனத் தெரியவந்தது.

பின்னா், ஜெயபிரகாஷை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக அவா் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். நாட்டு வெடிகுண்டை அங்கு வீசிய நபா்கள் குறித்து பாய்ச்சல் போலீஸாா் மற்றும் வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

மனோதைரியம் கூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

மேலப்பாளையத்தில் நாளை மின்நிறுத்தம்

என் பாடல்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வேகமாக பரவி வருகின்றன: இசையமைப்பாளா் தேவா

தண்ணீா்த் தொட்டிக்குள் தவறி விழுந்த மாணவா் உயிரிழப்பு

பாலாற்றின் நீரோட்டத்தை பாதிக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றக் கோரிக்கை!

SCROLL FOR NEXT