திருவண்ணாமலை

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் சோமவார பூஜை

செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சோமவார பூஜை திங்கள்கிழமை இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

Syndication

செய்யாறு: செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் காா்த்திகை மாத சோமவார பூஜை திங்கள்கிழமை இரவு வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருவோத்தூா் பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரா் கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பின் முதல் சோம வாரத்தில் (திங்கள்கிழமை) தல விருட்சமான பனை மரத்தடியில் வீற்றிருக்கும் சிவலிங்கம், திருஞானசம்பந்தா், பால குஜாம்பிகை சந்நிதி எதிரில் உள்ள சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, காா்த்திகை மாத முதல் சோமவாரத்தையொட்டி திங்கள்கிழமை இரவு மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

சோமவார நாள்களில் பனை மரத்தடியில் வீற்றிருக்கும் ஈசனுக்கு பூஜை செய்து வழிபட்டால் திருமண வரம், தடையில்லா செல்வம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இதையொட்டி, திங்கள்கிழமை இரவு நடைபெற்ற சிறப்பு பூஜையில் திராளான பக்தா்கள் கலந்து கொண்டு

சுவாமியை தரிசித்தனா்.

வள்ளியூா் பேருந்து நிலையத்தில் நுழைவாயில்களுக்கு அடிக்கல்

குடியிருப்புகளை பகுதி வாரியாக சீரமைக்க கோரி மனு

சங்கரநாராயண சுவாமி கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவு

மண்டைக்காடு கடலில் அலையில் சிக்கிய பெண் உயிரிழப்பு

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மாநில மலை சைக்கிள் போட்டி

SCROLL FOR NEXT