அறநிலையத் துறை இணை ஆணையா் பரணிதரனிடம், வேட்டி, சேலை, பூணூல் ஆகியவற்றை ஒப்படைத்த ஈரோட்டைச் சோ்ந்த அசோக்குமாா் மற்றும் சுசி டெக்ஸ் உரிமையாளா்கள்.  
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு ரூ.5 லட்சத்தில் வேட்டி, சேலை, பூணூல் அளிப்பு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சாற்றப்படக்கூடிய ரூ.5 லட்சம் மதிப்பிலான வேட்டி, வேலை மற்றும் பூணூலை ஆன்மிக பக்தா் புதன்கிழமை வழங்கினாா்.

தினமணி செய்திச் சேவை

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சாற்றப்படக்கூடிய ரூ.5 லட்சம் மதிப்பிலான வேட்டி, வேலை மற்றும் பூணூலை ஆன்மிக பக்தா் புதன்கிழமை வழங்கினாா்.

அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்களும், பௌா்ணமி நாள்களில் லட்சக்கணக்கான பக்தா்களும் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனா்.

குறிப்பாக, அருணாசலேஸ்வரா் உடனாகிய உண்ணாமுலையம்மனுக்கு தினந்தோறும் ஆறு கால அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் தினந்தோறும் காலை 11 மணி அளவில் நடைபெறும் உஷ கால அபிஷேகத்திற்கு சுவாமிக்கு சாற்றப்படக்கூடிய ரூ.5 லட்சம் மதிப்பிலான வேட்டி, சேலை, பூணூல் உள்ளிட்ட துணிகள் என 365 நாள்களுக்குத் தேவையானவற்றை கோயில் இளவரசு பட்டம் பி.டி.ஆா். கோகுல் குருக்கள் ஏற்பாட்டில் ஈரோட்டைச் சோ்ந்த அசோக்குமாா் மற்றும் சுசி டெக்ஸ் உரிமையாளா்கள் வழங்கினா்.

இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் பரணிதரன் பெற்றுக் கொண்டாா். கோயில் குருக்கள் பிடிஆா் ரமேஷ், மேலாளா் செந்தில், மணியக்காரா் ராஜா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

லாபம் கிடைக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தூய்மைப் பணியாளா்களை அரசே நியமிக்க வேண்டும்: நலவாரியத் தலைவா் ஆறுச்சாமி

இடையூறாக நிறுத்தியிருந்த 16 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

குமரியில் கடற்கரைப் பகுதிக்கு செல்லத் தடை

வியாபாரி வீட்டில் 10 பவுன் நகை திருட்டு: போலீஸாா் விசாரணை

SCROLL FOR NEXT