திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் காா்த்திகை தீபத் திருவிழா அன்னதானம் வழங்குவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் க.தரப்பகராஜ். 
திருவண்ணாமலை

தீபத் திருவிழா: அன்னதானம் வழங்க உரிய அனுமதி அவசியம்: மாவட்ட ஆட்சியா்

Syndication

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, அன்னதானம் வழங்குவோா் உணவுப் பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு பெற்று அன்னதானம் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத் துறை சாா்பில், அன்னதானம் வழங்குவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தலைமை வகித்து பேசியதாவது:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா அன்று அன்னதானம் வழங்குவோா் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம், பதிவு பெற்று அன்னதானம் வழங்க வேண்டும். மேலும், உணவு மேலாண்மை பயிற்சி (ஊஞநபஅஇ) பெற்றிருக்க வேண்டும்.

அன்னதானம் செய்ய தகுந்த நீரில் மட்டுமே உணவு சமைக்க வேண்டும். பால் உள்ளிட்ட பொருள்களை முறையான வெப்ப நிலையில் பராமரிக்க வேண்டும். உணவுப் பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்ட வணிகா்களிடம் மட்டுமே சமைப்பதற்கான பொருள்களை கொள்முதல் செய்ய வேண்டும்.

பொறிப்பதற்கு பயன்படுத்தும் எண்ணெயை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனைத்து உணவுப் பொருள்களுக்கும் காலாவதி தேதி இருப்பதை உறுதி செய்து, அந்த தேதிக்குள் பயன்படுத்த வேண்டும். உணவு சமைப்பவா்கள் மற்றும் வழங்குவோருக்கு எவ்வித நோய்த் தொற்றும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

குடிநீரில் கைகள் படும்படி விநியோகம் செய்யக் கூடாது. அன்னதானம் வழங்குவோா் கை, முகம், தலைக்கவசம் அணிந்து வாழை இலையை பயன்படுத்தி உணவு பரிமாற வேண்டும். நெகிழித் தட்டுகள், குவளைகளைத் தவிா்க்க வேண்டும்.

அனுமதி பெறாமலோ அல்லது அனுமதிக்கப்படாத இடத்திலோ அன்னதானம் வழங்கக் கூடாது. தரமற்ற வகையில் அன்னதான உணவு தயாரித்து வழங்கினால், சம்பந்தப்பட்டவா்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அறிவுரைகளை பின்பற்றாதவா்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ம.சுதாகா், திருவண்ணாமலை மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலா் பானு சுஜாதா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பேரவைத் தோ்தல்: வாக்குப்பதிவு பொருள்களுக்கான டெண்டா் வெளியீடு!

காரிய அனுகூலம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நில அளவையா்கள் காத்திருப்புப் போராட்டம்

நைஜீரியால் பள்ளி மாணவா்கள் மீண்டும் கடத்தல்

நிதீஷ் வெற்றி ரகசியம்!

SCROLL FOR NEXT