வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் வாயிலாக, ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களுக்கு கணக்கீட்டுப் படிவம் படிவங்கள் வழங்கப்படுவதை அதிமுகவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
கண்ணமங்கலம் பேரூராட்சியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற இந்தப் பணியை
அதிமுக மத்திய மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா ஆய்வு செய்தாா் (படம்).
ஆய்வின் போது கண்ணங்கலம் நகரச் செயலா் பாண்டியன், ஒன்றியச் செயலா்கள் பி.திருமால், விமல், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் கே.டி.குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.