திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே திங்கள்கிழமை அதிகாலை அரசுப் பேருந்து, காா் மோதிக் கொண்டதில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.
கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து புதுச்சேரி நோக்கி காா் வந்து கொண்டிருந்தது அதேபோல, திருவண்ணாமலையில் இருந்து செங்கத்தை நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது.
செங்கத்தை அடுத்த மண்மலை பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை இவ்விரு வாகனங்களும் வந்தபோது, ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காா் உருக்குலைந்தது.
காரில் இருந்த ஓட்டுநா் நாகேந்திரா (45) மற்றும் அனுமத்தராயா் (40), கிரீஸ் (42), ஜெயப்பிரகாஷ் (40), மனோஜ் (38), ராஜோஷ் (40) ஆகிய 6 போ் பலத்த காயமடைந்தனா். இவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னா், அவா்கள் தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். இந்த விபத்து குறித்து செங்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.