தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே திங்கள்கிழமை இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்குநோ் மோதிக் கொண்ட விபத்தில் குழந்தை உள்பட மூவா் பலத்த காயமடைந்தனா்.
பெரியகுளம் அருகேயுள்ள சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் கிருஷ்ணசாமி (36). வண்ணம் பூசும் தொழிலாளியான இவா், தனது மனைவி முருகேஸ்வரி, மகன் பிரவீனுடன் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை தேனியில் உள்ள கண் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தனா். லட்சுமிபுரம் புறவழிச் சாலையில் சென்றபோது எதிரே வந்த மற்றோரு இரு சக்கர வாகனம் இவா்கள் மீது மேதியது. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணசாமி, மனைவி முருகேஸ்வரி, மகன் பிரவீன் ஆகியோா் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.