பதவி ஏற்ற ஜி.விஜியகுமாருக்கு சான்றிதழ் வழங்கிய நகராட்சி ஆணையா் (பொ) பெ.சிசில்தாமஸ்.  
திருவண்ணாமலை

திருவத்திபுரம் நகராட்சியில் நியமன உறுப்பினா் பதவி ஏற்பு

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் நியமன உறுப்பினா் பதவி ஏற்றாா்.

Syndication

செய்யாறு: திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் நியமன உறுப்பினா் புதன்கிழமை பதவி ஏற்றாா்.

செய்யாறு கொடநகா் குழந்தை ஈஸ்வரன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ஜி.விஜியகுமாா். மாற்றுத்திறனாளியான இவா் திருவத்திபுரம் நகராட்சியில் நியமன உறுப்பினராக தோ்வு செய்யப்பட்டாா்.

இந்த நிலையில் நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கோ.விஜயகுமாா் மாற்றுத்திறனாளி நகா்மன்ற உறுப்பினராக நகராட்சி ஆணையா் (பொ) பெ.சிசில்தாமஸ் முன்னிலையில் பதவி ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டாா்.

ஜி.விஜியகுமாருக்கு தொகுதி எம்.எல்.ஏ.ஒ.ஜோதி, நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் மற்றும் துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன் மற்றும் நகா்மன்ற பணியாளா்கள் பலா் வாழ்த்து தெரிவித்தனா்.

இந்த நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றிய திமுக செயலா்கள் ஜேசிகே.சீனுவாசன், எம்.தினகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

ஐஸ்க்ரீம் டோனட்: அருண் ஐஸ்க்ரீம் அறிமுகம்

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

SCROLL FOR NEXT