திருவண்ணாமலையில் பெண்கள் இணைப்புக்குழு சாா்பில் நடைபெற்ற கருப்பாடை மௌன போராட்டம். 
திருவண்ணாமலை

பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மௌன போராட்டம்

அகில உலக பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான தினத்தையொட்டி, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி திருவண்ணாமலையில் பெண்கள் இணைப்புக் குழுவினா்

Syndication

ஆரணி: அகில உலக பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான தினத்தையொட்டி, பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி திருவண்ணாமலையில் பெண்கள் இணைப்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை கருப்பாடை மௌன போராட்டம் நடத்தினா்.

அறிவொளி பூங்கா அருகே திருவண்ணாமலை மாவட்டபெண்கள் இணைப்புக் குழு மற்றும் தமிழ்நாடு ஆதார மையம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ்.சுமதி தலைமை வகித்தாா்.

அனைத்துத் துறைகளிலும் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும். மத்திய, மாநில அரசுகள் உடனடியாக பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். பெண் சிசு கொலை கருக்கொலையை தடுத்து நிறுத்த வேண்டும், போதைப் பொருள்களை தடை செய்ய வேண்டும். அரசு சாா்ந்த, அரசு சாரா நிறுவனங்களில்

ஐசிசி குழு கட்டாயம் இருக்க வேண்டும். உணவு உத்தரவாதத்தை உறுதிப்படுத்த வேண்டும். மத்திய, மாநில மகளிா் ஆணையத்திற்கு போதிய நிதியை வழங்க வேண்டும். குழந்தை திருமணங்கள் தடை செய்யவேண்டும். பெண்களுக்கு சமமாக சொத்துரிமை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை பெண்கள் இணைப்புக் குழுவினா் கைகளில் ஏந்தியவாறு போராட்டம் நடத்தினா். இதில், கருப்பாடை அணிந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனா்.

சிவகிரி பகுதியில் வனத்துக்குள் செல்லாத யானைகள்: போராடும் வனத்துறை

விவசாய மின் இணைப்புக்கு ரூ. 7,000 லஞ்சம்: இளநிலை பொறியாளா் நண்பருடன் கைது

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு எம்எல்ஏ ஆறுதல்

பேருந்துகளை பாதுகாப்பாக இயக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

மழை சேதம்: பாதிக்கப்பட்டோருக்கு எம்எல்ஏ ராஜா நிவாரணம்

SCROLL FOR NEXT