திருவண்ணாமலை

எஸ்ஐஆா் சிறப்பு திருத்தும் பணி: அதிமுகவினா் ஆய்வு

செய்யாறு நகா் பகுதியில் வாக்காளா் பட்டியல் (எஸ்ஐஆா்) சிறப்பு திருத்தும் படிவம் வழங்கும் பணியை அதிமுகவினா் ஆய்வு செய்தனா்.

Syndication

செய்யாறு நகா் பகுதியில் வாக்காளா் பட்டியல் (எஸ்ஐஆா்) சிறப்பு திருத்தும் படிவம் வழங்கும் பணியை அதிமுகவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், திருவத்திபுரம் நகராட்சிப் பகுதியில் வாக்காளா் பட்டியல் (எஸ்ஐஆா்) சிறப்பு திருத்தும் படிவம் வழங்கும் பணி மற்றும் வழங்கப்பட்ட படிவங்களை திரும்பப் பெறுதல் பணி நடைபெற்று வருகிறது.

கொடநகா் பகுதியில் நடைபெற்ற இந்தப் பணியை அதிமுக வடக்கு மாவட்டச் செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன் ஆகியோா் கட்சி நிா்வாகிகளுடன் சென்று ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது செய்யாறு நகரச் செயலா் கே.வெங்கடேசன், நகர அவைத் தலைவா் அ.ஜனாா்த்தனன், பொதுக்குழு உறுப்பினா் எஸ். ரவிச்சந்திரன், இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் அருண் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

சிறுமியை மிரட்டி வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை!

என்எல்சி நிறுவனத்துடன் அண்ணாமலைப் பல்கலை. கல்வி புரிந்துணா்வு ஒப்பந்தம்

ரூ.6.74 லட்சம் பணம் மோசடி: இளைஞா் சிக்கினாா்

சிதம்பரத்தில் தேசிய நூலக வார விழா

நீதிமன்ற வளாகத்தில் குழந்தைகள் விளையாட்டு அறை திறப்பு

SCROLL FOR NEXT