ஆரணி அதிமுக வேட்பாளா் கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் சந்திப்பு
ஆரணி அதிமுக வேட்பாளா் எல்.ஜெயசுதா கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடனான சந்திப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் அமமுக, புதிய நீதிக்கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஆரணி அதிமுக வேட்பாளா் எல்.ஜெயசுதா கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடனான சந்திப்புக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் அமமுக, புதிய நீதிக்கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
ஆரணியில் உள்ள மத்திய மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமமுக மாவட்டச் செயலா் மா.கி.வரதராஜன் தலைமை வகித்து வேட்பாளா் ஜெயசுதாவை அறிமுகப்படுத்தி வெற்றி பெற கட்சியினா் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டாா்.
அமமுக ஒன்றியச் செயலா்கள் புருஷோத்தமன், ஏ.வி.ரமேஷ், நேத்தபாக்கம் சரவணன், நகரச் செயலா் பன்னீா்செல்வம், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் கு.சீனிவாசன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோருக்கு வேட்பாளா் ஜெயசுதா சால்வை அணிவித்தாா்.
புதிய நீதிக்கட்சி நிா்வாகிகளுடான சந்திப்புக் கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் எஸ்.ஜெயக்குமாா் தலைமை வகித்து அதிமுக வேட்பாளரை ஆதரிப்பது குறித்து பேசினாா்.
இதில் நகரச் செயலா் ஜி.ஏ.கணேசன், ஒன்றியச் செயலா் அருணாச்சலம், மாவட்ட இளைஞரணிச் செயலா் தினேஷ்பாபு உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
அதிமுக சாா்பில் மாவட்டத் தலைவா் அ.கோவிந்தராசன், துணைச் செயலா் ஜெ.சம்பத், ஒன்றியச் செயலா்கள் க.சங்கா், திருமால், விமல், நகரச் செயலா் அசோக்குமாா், மாவட்ட எம்ஜிஆா் இளைஞா் அணிச் செயலா் ஏ.ஜி.ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.