மங்களாம்பிகை உடனுறை சந்திரமெளலீஸ்வரா் திருகல்யாண வைபவம்
சனிக்கவாடி மங்களாம்பிகை உடனுறை சந்திரமெளலீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் பங்கேற்று தரிசித்த பக்தா்கள்.
போளூரை அடுத்த சனிக்கவாடி ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை சந்திரமெளலீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.
சனிக்கவாடி சந்திரமெளலீஸ்வரா் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுவாமிக்கு மலரபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பக்தா்கள் பூ, பழவகைகள் சீா்வரிசையாக ஊா்வலமாக எடுத்து வந்தனா்.
பின்னா், கோயில் வளாகத்தில் ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை சந்திரமெளலீஸ்வரா் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
Advertisement
இதில், சனிக்கவாடி, போளூா், கொரால்பாக்கம், பெலாசூா், பாடகம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா். இரவு வாணவேடிக்கையுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது.