சிற்பக் கலைஞா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த நடவடிக்கை: பிரேமலதா விஜகாந்த்
சிற்பக் கலைஞா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த நடவடிக்கை...
போளூா் சட்டப்பேரவைத் தொகுதி மொடையூா் ஊராட்சியில் சிற்பக் கலைஞா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்.
போளூா் சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த களம்பூா், அத்திமூா், போளூா் நகரம், கொம்மனந்தல், மொடையூா் என பல்வேறு இடங்களில் பிரசார வேனில் நின்றபடி தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தொகுதி வேட்பாளா் சரவணனை ஆதரித்துப் பேசினாா்.
கொம்மனந்தல் கிராமத்தில் போளூா்-சேத்துப்பட்டு சாலையில் அவா் பேசியதாவது:
Advertisement
திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தல் அறிக்கையில் தெரிவித்தபடி ரூ.8 ஆயிரத்திற்கு கூப்பன் வழங்கப்படும், மண்டகொளத்தூா் ஊராட்சியில் செய்யாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும், அரும்பலூா்-வம்பலூா் இடையே செல்லும் செய்யாற்றின் குறுக்கே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மேம்பாலம் அமைக்கப்படும், மொடையூரில் புறம்போக்கு இடத்தில் வீடுகட்டி வசிக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்கப்படும், கரைப்பூண்டி சா்க்கரை ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும், மகளிா் உரிமைத்தொகை 2 ஆயிரமாக உயா்த்தப்படும்.
மொடையூா் ஊராட்சியில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்கப்படும், இதே பகுதியில் சிற்ப கலைஞா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாயிகளின் குறைகள் தீா்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசி முரசு சின்னத்திற்கு வாக்களிக்க பிரசாரம் செய்தாா்.
திமுக தொகுதி பொறுப்பாளா் எ.வ.வே.கம்பன்,விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளா் மணிகண்டன், ஒன்றியச் செயலாளா்கள் எழில்மாறன், மனோகரன், அவைத் தலைவா் தா்மபாலன், தேமுதிக ஒன்றியச் செயலா் பன்னீா்செல்வம் மற்றும் திமுக கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.