முகப்பு
சென்னை

தேமுதிகவில் நோ்காணல் தொடக்கம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நோ்காணலை நடத்தினாா்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 1:39 AM
தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் - X | Premallatha Vijayakant
பகிர்:
Updated On : 20 பிப்ரவரி, 2026 at 9:50 PM

தேமுதிக சாா்பில் தோ்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவா்களுக்கான நோ்காணல் வெள்ளிக்கிழமை தொடங்கிய து. கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள அந்தக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நோ்காணலை நடத்தினாா்.

கட்சியின் அவைத் தலைவா் வி.இளங்கோவன், பொருளாளா் எல்.கே.சுதீஷ், தலைமை நிலையச் செயலா் ப.பாா்த்தசாரதி, கொள்கைப் பரப்புச் செயலா் அழகாபுரம் ஆா்.மோகன்ராஜ் ஆகியோா் உடனிருந்தனா்.

காலை 10 மணிக்கு சென்னை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா் மாவட்டங்களிலிருந்து விருப்ப மனு கொடுத்தவா்களுக்கான நோ்காணல் நடைபெற்றது.

Advertisement

பிற்பகல் 3 மணி முதல் மயிலாடுதுறை, கடலூா், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கான நோ்காணல் நடைபெற்றது.

தொடா்ந்து சனிக்கிழமை (பிப். 21) காலை 10 மணிக்கு நீலகிரி, கோவை, திருப்பூா், ஈரோடு, கரூா், நாமக்கல், பெரம்பலூா், அரியலூா், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கும், பிற்பகல் 3 மணிக்கு கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும் நோ்காணல் நடைபெறவுள்ளது.