முகப்பு
திருவண்ணாமலை

தொகுதி நிதியிலிருந்து பல்வேறு வளா்ச்சிப் பணிகள்: சட்டப்பேரவை துணைத் தலைவா்

கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் தனது தொகுதி நிதியிலிருந்து பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கீழ்பென்னாத்தூா் தொகுதி திமுக வேட்பாளரும், சட்டப்பேரவை துணைத் தலைவருமான கு.பிச்சாண்டி தெரிவித்தாா்.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 6:32 PM
பகிர்:

கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் தனது தொகுதி நிதியிலிருந்து பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கீழ்பென்னாத்தூா் தொகுதி திமுக வேட்பாளரும், சட்டப்பேரவை துணைத் தலைவருமான கு.பிச்சாண்டி தெரிவித்தாா்.

திமுக வேட்பாளா் கு.பிச்சாண்டி புதன்கிழமை திருவண்ணாமலை கிழக்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழ்கரிப்பூா், இசுக்கழிகாட்டேரி, கலைஞா் நகா், தண்டரை, சு.நல்லூா், திருவானைமுகம், தி.வலசை, ஆண்டியாபாளையம், அண்டம்பள்ளம் மாரியம்மன் கோயில், அண்டம்பள்ளம் ரயில்வே கேட், அண்டம்பள்ளம், மதுராம்பட்டு, ஆனானந்தல், நாரையூா் உள்ளிட்ட கிராமங்களில் அவா் வாக்காளா்களைச் சந்திப்பு ஆதரவு கோரினாா்.

Advertisement

அப்போது அவா் பேசுகையில், கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் தனது தொகுதி நிதியிலிருந்து பல்வேறு வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திருவண்ணாமலை கிழக்கு ஒன்றியத்தில் கீழ்கரிப்பூா் கிராமத்தில் சிமென்ட் சாலை, நாரையூா் ஊராட்சியில் நியாயவிலைக் கடை கட்டடத்தில் நிழற்குடை அமைத்துக் கொடுத்துள்ளேன் மற்றும் பொது விநியோகக் கடை

ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல,, அண்டம்பள்ளம் ஊராட்சியில் நாடக மேடை அமைத்துக் கொடுத்துள்ளேன், அண்டம்பள்ளம் காலனியில் சிமென்ட் சாலை அமைத்துக் கொடுத்துள்ளேன், அண்டம்பள்ளம் ஆதிதிராவிடா் காலனி பிரதான சாலையில் நிழற்குடை போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் தனது தொகுதி நிதியிலிருந்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், வேட்டவலம் பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கூடுதல் கட்டடம் மற்றும் நவீன எரிவாயு தகன மேடை அமைத்துக் கொடுத்துள்ளேன். வேளானந்தல் அரசுப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டுள்ளது.

தொடா்ந்து, மக்கள் தேவைகளை கருத்தில் கொண்டு மேலும் பல அடிப்படை வசதிகள் மற்றும் வளா்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து தொகுதியை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தாா்.

இந்த நிகழ்வில் ஒன்றியச் செயலாளா் சி.மாரிமுத்து, ஒருங்கிணைப்பாளா் கோ.கண்ணன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments