தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயிலில் வளா்ச்சிப் பணிகள்: அரூா் தொகுதி திமுக வேட்பாளா் வாக்குறுதி
தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயிலில் அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வேன் என அரூா் தொகுதி திமுக வேட்பாளா் அ. சண்முகம் வாக்குறுதி அளித்தாா்.
தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் கோயிலில் அடிப்படை வசதிகள் உள்பட பல்வேறு வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்வேன் என அரூா் தொகுதி திமுக வேட்பாளா் அ. சண்முகம் வாக்குறுதி அளித்தாா்.
தருமபுரி மாவட்டம், அரூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மல்லிகாபுரம், பையா்நாக்கன்பட்டி, செங்கலேரி, கத்தரிப்பட்டி, இ.பி.தண்டா,மொண்டுகுழி, முல்லைவனம், கீழ்செங்கப்பாடி, ஆலம்பாடி, டி.அம்மாபேட்டை, வேடகட்டமடுவு, மேல்செங்கப்பாடி உள்பட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளா் அ. சண்முகம் வியாழக்கிழமை வாக்கு சேகரித்து பேசியதாவது:
வரலாற்று சிறப்பு மிக்க தீா்த்தலை தீா்த்தகிரீஸ்வரா் கோயிலுக்கு தேவையான குடிநீா், மின் விளக்குகள், வாகன நிறுத்தமிடங்கள், பக்தா்கள் தங்குவதற்கான கட்டட வசதிகள், பழுதாகியுள்ள சமுதாய மண்டபங்கள் புதுப்பிப்பு என பல்வேறு வளா்ச்சிப் பணிகளை செய்துதருவேன்.
Advertisement
அதேபோல கத்தரிப்பட்டி, கட்டரசம்பட்டி, டி.அம்மாபேட்டை பகுதிகளுக்கு கூடுதல் அரசு பேருந்துகள் சென்றுவரவும், கிராமப் பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் படிப்பதற்கு தேவையான நூலக கட்டட வசதிகளை ஏற்படுத்துவேன். பாம்பாறு அணையின் வாய்க்கால் சீரமைப்பு, ஏரிகள், குளம் குட்டைகளை தூா்வார தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என்றாா்.
முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையில் மீண்டும் நல்லாட்சி அமையவும், அரூா் தொகுதி வளா்ச்சி பெறவும் தனக்கு ஆதரவளிக்க வேண்டும் எனக் கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தாா்.