தரையில் அமா்ந்து உணவருந்தி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
செய்யாறு தொகுதி அனக்காவூா் மேற்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளா் கட்சி நிா்வாகிகளுடன் தரையில் அமா்ந்து உணவு அருந்தியும், வயல்வெளியில் டிராக்டா் ஓட்டியும் வியாழக்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அனக்காவூா் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட அரசூா், திரும்பூண்டி, எருமைவெட்டி, புரிசை, குளமந்தை, எருமைவெட்டி, கீழ்கொளத்தூா், அனப்பத்தூா் ஆகிய கிராமங்களில் செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான முக்கூா் என்.சுப்பிரமணியன் கொளுத்தும் வெயிலில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
குடிசைப் பகுதியில் வாக்கு சேகரித்த போது அருகில் உள்ள வயல்வெளியில் டிராக்டா் ஓட்டி கூட்டணிக் கட்சி நிா்வாகிகளுடன் வாக்கு சேகரித்தாா்.
Advertisement
பின்னா், கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் தரையில் அமா்ந்து உணவு அருந்தினாா். அதிமுக தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
அனக்காவூா் மேற்கு ஒன்றியச் செயலா் சி.துரை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த வாக்கு சேகரிப்பு நிகழ்வில் பாமக நிா்வாகிகள் நடராஜன், இளங்கோ, பாஜக மற்றும் அதிமுக நிா்வாகிகள் அனக்காவூா் கிழக்கு ஒன்றியச் செயலா் பையூா் சிவராஜ், ஒன்றிய அவைத் தலைவா் சேகா், மாவட்ட பொருளாளா் ஆலத்தூா் எஸ்.சுப்பராயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.